உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சண்டை காட்சியில் நடிக்க ரெஜினா - நிவேதா தாமஸ்க்கு பயிற்சி

சண்டை காட்சியில் நடிக்க ரெஜினா - நிவேதா தாமஸ்க்கு பயிற்சி

நடிகைகள் ரெஜினாவும், நிவேதா தாமசும் தற்போது தெலுங்கில் சாகினி - தாகினி என்றொரு மல்டி ஸ்டார் படத்தில் நடித்து வருகின்றனர். சுதீர் வர்மா இயக்கும் இந்த படம் மிட்நைட் ரன்னர்ஸ் என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் ரெஜினா - நிவேதா தாமஸ் இருவரும் நேரடியாக மோதிக்கொள்ளும் ஒரு அதிரடியான சண்டை காட்சி இடம் பெறுகிறதாம். அதனால் இந்த சண்டை காட்சியாக மிட்நைட் ரன்னர்ஸ் படத்திற்கு சண்டை பயிற்சி கொடுத்த மாஸ்டரையே ஐதராபாத்திற்கு வரவைத்து ரெஜினா - நிவேதா தாமஸ்க்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதத்தில் இந்த சண்டை காட்சி படமாக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !