உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாகசைதன்யா தீவிர உடற்பயிற்சி

நாகசைதன்யா தீவிர உடற்பயிற்சி

தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்துள்ள நாக சைதன்யா, அடுத்தபடியாக தேங்க்யூ என்ற படத்தில் நடிப்பவர், ஹிந்தியில் அமீர்கானுடன் இணைந்து லால் சிங் சத்தா என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகும் நாகசைதன்யா இப்படத்தில் ஒரு ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ளும் அவர், முன்னதாக ராணுவ அதிகாரி வேடத்திற்கேற்ப வெயிட் போட்டு உடம்பை கட்டுமஸ்தாக மாற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதற்காக ஒரு பயிற்சியாளரை நியமித்து தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் நாகசைதன்யா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !