அழகிய கண்ணேக்காக பாடிய ஜி.வி.பிரகாஷ்
ADDED : 1612 days ago
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் நடிக்கும் படம் அழகிய கண்ணே.மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார். சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன்,விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள் .
படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். இதில் நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் லியோ சிவகுமாரின் அறிமுக பாடலை பாடி கொடுத்துள்ளார். இதற்காக லியோ சிவகுமார் ஜி.வி.பிரகாஷை அவரது ஸ்டூடியோவில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.