லாரன்ஸின் “அதிகாரம்” - பான் இந்திய படமாக தயாராகிறது
ADDED : 1566 days ago
தயாரிப்பாளர் கதிரேசனும், இயக்குனர் வெற்றி மாறனும் இணைந்து தயாரிக்கும் படம் “அதிகாரம்”. இதை எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்குகிறார். பிரமாண்ட படைப்பாக பான்-இந்தியா படமாக தயாராகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இவர் கதிரேசன் இயக்கத்தில் 'ருத்ரன்' நடித்து வருகிறார். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். இதன் படபிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படபிடிப்பு நடைபெறும். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. கையில் கத்தி, உடலில் ரத்தம் என பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக உள்ளது.