ஹாரர் படத்தில் காஜல் அகர்வால்
ADDED : 1566 days ago
வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்கிற வெப் சீரிஸில் நடித்த காஜல் அகர்வால், அடுத்ததாக மீண்டும் ஒரு ஹாரர் திரைப்படத்திலேயே நடிக்க இருக்கிறார். யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய டீகே தான் இந்தப்படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து காஜல் அகர்வாலிடம் இந்தப்படத்தின் கதையை கூறினாராம் டீகே. ஏற்கனவே டீகே இயக்கிய கவலை வேண்டாம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் காஜல் அகர்வால். அந்தப்படம் சரியாக போகாவிட்டாலும் கூட, தற்போது டீகே சொன்ன கதை பிடித்திருந்ததால் ஓகே சொல்லிவிட்டாராம்.