நயன்தாராவுக்கு வில்லனாகும் சுதீப்
ADDED : 1566 days ago
நடிகர் கிச்சா சுதீப்பை பொறுத்தவரை கன்னடத்தில் ஹீரோவாகவும், மற்ற மொழிகளில் வில்லன், குணச்சித்திர நடிகர் எனவும் இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். அந்தவகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கு வரவேற்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்தநிலையில் நெற்றிக்கண் படத்தை தொடர்ந்து மீண்டும் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நயன்தாரா நடிக்க, அந்தப்படத்தில் வில்லனாக நடிக்க சுதீப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்க உள்ளதாம். ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான காஸ்மோரா படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.