நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீ
ADDED : 1565 days ago
தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருபவர் பிரியா பவானி சங்கர். சோசில் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் அவர், தற்போது தனது உடலை பிட்டாக வைப்பதற்காக உடற்பயிற்சி செய்யும் போட்டோவை பகிர்ந்துள்ளார். ஒரு போட்டோவில் கயிற்றில் அந்தரத்தில் தொங்கும் ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருப்பவர், ‛‛ஹேய், நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீ'' ஒரு படத்தில் வடிவேலு பேசும் வசனத்தை பதிவிட்டு தன்னை தானே கிண்டல் செய்துள்ளார் பிரியா பவானி சங்கர்.