நயன்தாரா படத்தில் 11 பாடல்கள்
ADDED : 1666 days ago
அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக மூன்று புதிய படங்களில் கமிட்டாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் பாட்டு என்ற மலையாள படத்தில் பகத்பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்திற்கு அல்போன்ஸ் புத்திரனே இசையமைப்பதோடு, பாட்டு என்ற டைட்டீலுக்கேற்ப இந்த படத்தில் 11 பாடல்கள் வைத்திருக்கிறாராம்.