மகள் திருமணம் : முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்
ADDED : 1608 days ago
இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா - கிரிக்கெட் வீரர் ரோஷித் தாமோதரன் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக மணமக்களின நெருங்கிய உறவினர் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், நடிகரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த நிலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஷங்கர் டுவீட் செய்துள்ளார். அதில், முதல்வரின் ஆசீர்வாதம் மணமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த அருமையான நிகழ்வு எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஆசீர்வாதம் என்று தெரிவித்துள்ள டைரக்டர் ஷங்கர், அமைச்சர் மா.சுப்ரமணியம், எம்எல்ஏ உதயநிதி ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.