மந்திரா பேடி கணவர் திடீர் மரணம்
2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை மந்திரா பேடி. சினிமா, டிவி தொடர்களிலும் நடித்துள்ளவர்.
தமிழில் சிம்பு நடித்த “மன்மதன் படத்திலும், சாஹோ படத்திலும் நடித்துள்ளார். தற்போது அடங்காதே படத்தில் நடித்து வருகிறார். ராஜ் கௌஷல் என்பவரை 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மந்திரா. அவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த வருடம் தான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார்கள்.
இந்நிலையில் இன்று(ஜூன் 30) அதிகாலை ராஜ் கௌஷல் மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் இருவரும் தங்களது நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்கள். அன்று தான் தன் மனைவி, குழந்தைகளுடன் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். அடுத்த சில தினங்களுக்குள் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.