உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் டிவியில் ஜுனியர் என்டிஆர்

மீண்டும் டிவியில் ஜுனியர் என்டிஆர்

ஒரு காலத்தில் டிவியைப் பார்த்து ஒதுங்கிய சினிமா நட்சத்திரங்கள் கால மாற்றத்தால் டிவியிலும் தங்களது பங்களிப்பை வழங்க ஆரம்பித்தார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்கள் டிவி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாக பணியாற்ற ஆரம்பித்தார்கள்.

கமல்ஹாசன், மோகன்லால், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, சூர்யா, பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி, சுரேஷ் கோபி, நான் ஈ சுதீப், புனித் ராஜ்குமார், ஜுனியர் என்டிஆர், நானி, ராணா டகுபட்டி, பிரசன்னா, குஷ்பு, சுஹாசினி, லட்சுமி மஞ்சு, ரோஜா, சுமலதா, ஜீவிதா, ரம்யா கிருஷ்ணன், தேவயானி, சினேகா, பிரியா ராமன் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜுனியர் என்டிஆர் மீண்டும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக மாற உள்ளார். ஜெமினி டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'எவரு மீலோ கோட்டீஸ்வரலு' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கான படப்பிடிப்ப அடுத்த வாரம் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற உள்ளதாம்.

இதற்கு முன்பு தெலுங்கு பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருந்தார் ஜுனியர் என்டிஆர். நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டிவி பக்கம் வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !