நடிகை யாமி கவுதமிற்கு அமலாக்கத்துறை சம்மன்
ADDED : 1556 days ago
பிரபல நடிகை யாமி கவுதம். தமிழில் கெளரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்தார். தென்னிந்தியாவை விட ஹிந்தியில் பிரபல நடிகையாக திகழும் இவர் கடந்த மாதம் திடீரென ஹிந்தி இயக்குனர் ஆதித்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை இவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. நடிகை யாமியின் வங்கிகணக்கில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி ரூ.1.5 கோடி பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும், இதுதொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்டு யாமிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்தவாரம் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.