பிரபாஸ் ஹேர்ஸ்டைலுக்கு மட்டும் நாலு லட்சம்
ADDED : 1556 days ago
பாகுபலி நாயகன் பிரபாஸ், ராதே ஷ்யாம் படத்தில் நடித்து முடித்துவிட்டு, அடுத்ததாக கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் சலார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா நடிகராக பிரபாஸ் ஆனதாலோ என்னவோ அவரது படங்களின் பட்ஜெட்டும் அந்த அளவுக்கு பிரமாண்டமாகவே இருக்கிறது.
குறிப்பாக இந்த சலார் படத்தில், பிரபாஸ் மற்ற படங்களிலிருந்து மாறுபட்டு சற்றே வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் நடிக்கிறார். அதனால் இந்த ஹேர்ஸ்டைலுக்காக மட்டும் 4 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார்களாம். இதற்காக பாலிவுட்டிலிருந்து பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட் ஒருவர் வரவழைக்கப்பட்டு உள்ளாராம். ஹேர்ஸ்டைலுக்காக மட்டும் ஒரு ஹீரோவுக்கு இவ்வளவு செலவு செய்வது சினிமா வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கும்.