சரண்யா - பொன்வண்ணன் மகள் திருமணம் - முதல்வர் வாழ்த்து
ADDED : 1562 days ago
நட்சத்திர தம்பதியர் சரண்யா - பொன்வண்ணன். தமிழ் சினிமாவில் இருவரும் தனித்தனியாக ஏராளமான படங்களிலும், ஓரிரு படங்களில் சேர்ந்தும் நடித்துள்ளனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரு மகள்கள் உள்ளனர். மூத்தவர் பிரியதர்ஷினிக்கு விக்னேஷ் என்பவர் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று இவர்களது திருமணம் சென்னையில் நடந்தது. முன்னதாக நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, மகனும், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர். மணமக்களுக்கு மரக்கன்றுள் அடங்கிய பசுமைக்கூடையை முதல்வர் பரிசாக அளித்தார்.