உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வெளியாகிறது வாழ்

ஓடிடியில் வெளியாகிறது வாழ்

தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த அருவி படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமன். நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் வாழ். சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அருவி படம் போலவே, முற்றிலும் புதுமுகங்களை வைத்து படத்தை இயக்கி உள்ளார் அருண்பிரபு புருஷோத்தமன். படத்தின் பணிகள் முடிந்து பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. கொரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. தற்போது இதன் வெளியீட்டு உரிமத்தை சமீபத்தில் தொடங்கப்பட்ட சோனி லைவ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜூலை 16ம் தேதி படம் வெளியாகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஒரு சில நாளில் வெளிவரும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !