விஜய் சேதுபதியை சந்தித்த ஷிவானி
ADDED : 1552 days ago
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஷிவானி சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் விஜய் சேதுபதி எளிமையின் அடையாளம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரும் எடுத்துக் கொண்ட அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.