முதன்முதலாக பவன்கல்யாணுடன் இணையும் நித்யா மேனன்
ADDED : 1585 days ago
மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் சாகர் சந்திரா. இந்த படத்தில் பவன்கல்யாணும், ராணாவும் இணைந்து நடிக்கிறார். ஜூலை 12 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்தபடத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் பவன்கல்யாணுக்கு ஜோடியாக நித்யாமேனன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல்படம் இது. மேலும், அவரது மனைவியாக ஒரு அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார் நித்யாமேனன். அதேபோல் இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களும் இணைந்து நடிக்கும் முதல்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.