மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு படத்தில் டாப்சி
ADDED : 1585 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் டாப்சி, தமிழ், தெலுங்கில் உருவான கேம் ஓவர் படத்தில் கடைசியாக நடித்தார். அதையடுத்து ஹிந்தியில் பிசியாகி விட்டவர், மூன்று வருடங்களுக்குப்பிறகு தற்போது மிஷன் இம்பாசிபிள் என்றொரு தெலுங்கு படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தை ஸ்வரூப் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தை தமிழ், ஹிந்தியில் டப் செய்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.