உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிவியில் இருந்து சினிமாவுக்கு... ட்ரெண்ட் மாறியது பற்றி வாணி போஜன்

டிவியில் இருந்து சினிமாவுக்கு... ட்ரெண்ட் மாறியது பற்றி வாணி போஜன்

முன்பெல்லாம் டிவி நடிகைகள் என்றாலே சினிமாவில் காமெடி, அக்கா, அண்ணி வேடங்கள் தான் தருவார்கள். தற்போது பிரியா பவானி சங்கர், வாணி போஜன், பவித்ரா என டிவியில் இருந்து வருபவர்கள் நாயகிகளாக நடிக்க தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து வாணி போஜனிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு அவர் கூறியுள்ளதாவது, ‛‛இது ஒரு டிரெண்ட் செட்டிங் தான். எங்களை போல இன்னும் நிறைய திறமையான நடிகைகள் டிவியில் இருந்தும் வர வேண்டும். சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது நிறையவே சவால்கள் இருந்தன. சில படங்கள் கமிட் ஆகி நின்றன. ஆனால் என்னை ஊக்கப்படுத்தி நல்ல கதாபாத்திரம் கொடுத்து பார்த்தவர் அஷ்வத் மாரிமுத்து தான். ஓ மை கடவுளே படம் எனக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. நான் நேரடியாக சினிமாவுக்கு வந்திருந்தால் கூட இந்த பிரபலம் கிடைத்திருக்குமா என தெரியாது. டிவி மூலமாக எல்லா குடும்பங்களிடமும் சென்றுவிட்டேன். சத்யா என்று அந்த பெயரை சொல்லித்தான் அழைக்கிறார்கள். 'சினிமாவை விடுங்கள். எப்போது டிவிக்கு மீண்டும் வருவீர்கள்? என்று கேட்கிறார்கள்''.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !