சினிமா வாய்ப்பு இல்லாததால் ஓடிடி பக்கம் செல்லும் ஓவியா
'களவாணி' படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா, மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா பங்கேற்றார். சினிமாவை விட இந்நிகழ்ச்சியின் மூலம்தான் பிரபலமானார். ஆனால் அது சினிமா வாய்ப்பாக மாறவில்லை. சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தற்போது ஒரு வெப் தொடரில் நடித்தார். சமீபத்தில்தான் இந்த தொடர் யூடியூப்பில் வெளியானது. தொடர்ந்து ஓவியா ஓடிடி தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி கதைகள் கேட்டு வருகிறார்.
சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக நலனிலும், பெண்கள் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டவர் ஓவியா. பல பொது பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருக்கும் ஓவியா, கேஷுவலாக அமர்ந்திருக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.