உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆண்ட்ராய்டு குஞ்சப்பனின் இரண்டாம் பாகம் அறிவிப்பு

ஆண்ட்ராய்டு குஞ்சப்பனின் இரண்டாம் பாகம் அறிவிப்பு

கடந்த வருடம் மலையாளத்தில் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25' என்கிற படம் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. கிராமத்தில் தனிமையில் இருக்கும் வயதான ஒரு பெரியவருக்கு ஒரு ரோபோ எப்படி துணையாக மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன்.

மலையாளத்தில் முன்னணி காமெடி நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு, இந்தப்படத்தின் கதையின் நாயகனாக, 70 வயது கிழவராக அற்புதமாக நடித்திருந்தார். கூடவே அவருக்கு துணையாக ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற ஒரு குட்டி ரோபோட்டும் நடித்திருந்தது. தமிழில் கூட இந்தப்படம் கூகுள் குட்டப்பன் என்கிற பெயரில் கே.எஸ்.ரவிகுமாரின் சீடர்களான சபரி மற்றும் சரவணன் இயக்கத்தில் ரீமேக்காகி வருகிறது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தின் மைய கதாபாத்திரமான வயதான பெரியவராக நடித்து வருகிறார்.

இந்தநிலையில், தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்திற்கு ஏலியன் அலியன் (வேற்றுக்கிரக மச்சான்) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் தொடர்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !