உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூலை 15ல் ஆர்ஆர்ஆர் மேக்கிங் வீடியோ

ஜூலை 15ல் ஆர்ஆர்ஆர் மேக்கிங் வீடியோ

பாகுபலி 2 படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கியுள்ள அடுத்த பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் வசன காட்சிகள் அனைத்து படமாக்கப்பட்டு விட்ட நிலையில், இரண்டு பாடல்கள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது. அந்த பாடல்களை அடுத்த மாதத்தோடு படமாக்கி விட திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. இப்படத்தின் பல பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வருகிற ஜூலை 15-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகும் என படக்குழுவினர் டுவிட்டரில் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !