உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் வில்லனாக கலக்கி வரும் சமுத்திரகனி

தெலுங்கில் வில்லனாக கலக்கி வரும் சமுத்திரகனி

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் உள்பட சில படங்களில் வில்லனாக நடித்திருந்த டைரக்டர் சமுத்திரகனி, வித்தியாசமான குணசித்ர வேடங்களில் தான் அதிகமாக நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் தலைவி, அந்தகன், டான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் மற்றும் மகேஷ்பாபுவின் படம், ஆகாசவாணி என பல படங்களில் நடிக்கிறார். அந்த வகையில் தற்போது தமிழை விட தெலுங்கில் தான் பிசியாக நடித்து வருகிறார் சமுத்திரகனி. மேலும், அல்லு அர்ஜூனின் அலவைகுண்டபுரம்லோ, ரவிதேஜாவின் கிராக் போன்ற படங்களில் வில்லனாக நடித்து தெலுங்கு ரசிகர்களிடம் கைதட்டல் பெற்ற சமுத்திரகனி தற்போது மேலும் இரண்டு படங்களில் வில்லனாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

அந்தவகையில் உப்பெனா, மாஸ்டர் தெலுங்கு டப்பிங் படங்கள் மூலம் வில்லனாக நடித்து தெலுங்கு ரசிகர்களை விஜய் சேதுபதி கவர்ந்தது போன்று சமுத்திரகனியும் தெலுங்கு சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !