உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சொந்த படம் வெற்றி பெற ஏழுமலையானை தரிசித்த நமீதா

சொந்த படம் வெற்றி பெற ஏழுமலையானை தரிசித்த நமீதா

நடிகை நமீதா தற்போது நமீதா தியேட்டர்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் பாவ் பாவ் என்ற படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரித்துள்ளார். அவரே ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.

இதை தொடர்ந்து படம் வெற்றி பெறவும், தொடர்ந்து படம் தயாரிக்கவும், நடிக்கவும், புதிதாக தொடங்கி உள்ள ஓடிடி தளம் வெற்றி பெறவும் வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது கணவர் வீரேந்திர சவுத்ரியும் உடன் சென்றார்.

இருவரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று மூலவர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அத்துடன் கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர்.

தரிசனம் முடிந்து வெளியில் வந்த நமீதா நிருபர்களிடம் கூறும்போது ஏழுமலையானை தரிசனம் செய்தது சந்தோஷமாக இருந்தது. நான் நடித்த பாவ் பாவ் படம் படப்பிடிப்பு முடிந்து திரையிட தயாராகி வருகிறது. நமீதா தியேட்டா்ஸ் என்ற பெயரில் புதிய ஓடிடி செயலி, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !