உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் இல்லாமல் காதல் கோட்டை 25வது ஆண்டு கொண்டாட்டம்

அஜித் இல்லாமல் காதல் கோட்டை 25வது ஆண்டு கொண்டாட்டம்

அகத்தியன் இயக்கத்தில் தேவா இசையமைப்பில் அஜித்குமார், தேவயானி மற்றும் பலர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் திரைக்கு வந்து 25 வருடங்கள் ஆனது. இப்படத்தின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தை படத்தின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் நேற்று சென்னையில் நடத்தினார்

இந்த கொண்டாட்டத்தில் படத்தின் இயக்குனர் அகத்தியன் இசையமைப்பாளர் தேவா படத்தில் நடித்த தேவயானி தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் கதாநாயகன் அஜித் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. காதல் கோட்டை திரைப்படம் தான் அஜித்திற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த கொண்டாட்டம் பற்றி படத்தின் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது : சிவசக்தி மூவி மேக்கர்ஸ், திரைப்பட நிறுவனக்குடும்பத்தை காதல் கோட்டை திரைப்படம் 25 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்வில் நேற்று சந்தித்தேன். அனைவருக்கும் மனநிறைவு அளிக்கும் வகையில் நிகழ்வு இனிதே நடந்தேறியது. 25 ஆண்டுகள் கடந்த நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !