விஜய், தனுஷைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்
ADDED : 1551 days ago
தமிழ் இயக்குனரான ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தையும், லிங்குசாமி ராம் பொத்னேனியை வைத்து ஒரு படத்தையும் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரகனி போன்றோர் தெலுங்கு படங்களில் வில்லனாக, குணசித்ர நடிகராக நடித்து வரும் நிலையில், பீஸ்ட் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66ஆவது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி தமிழ், தெலுங்கில் இயக்குகிறார். அதேபோல் சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகப்போகிறார் தனுஷ்.
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிருக்கிறாராம். இந்த படத்தை தெலுங்கில் ஜாதிரத்னலு என்ற படத்தை இயக்கிய அனுதீப் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறதாம்.