கார் ரேஸ் - லெவல் 1 பயிற்சியை முடித்த நிவேதா
ADDED : 1551 days ago
தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். கார் ரேஸிலும் இவர் அதிக ஆர்வம் மிக்கவர். சமீபத்தில் இது தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டு வந்த போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இப்போது பார்முலா ரேஸ் கார் லெவல் 1 பயிற்சியை முடித்து, அதற்கான சான்றையும் பெற்றுள்ளார். அடுத்து, கார் ரேஸில் ஈடுபடுவீர்களா என அவரிடம் கேட்டால், ‛‛இப்போதைக்கு அடுத்தடுத்த நிலைகளில் உள்ள பயிற்சியை முடிப்பதில் தான் என முழு கவனமும் உள்ளது'' என்கிறார் நிவேதா.