ஜெயம் ரவி ஜோடியாக பிரியா பவானி சங்கர்
ADDED : 1551 days ago
பொன்னியின் செல்வன், ஜன கன மன படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, அடுத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் உடன் ஒரு படம் பண்ணுகிறார். இதற்கான பணிகள் துவங்கி உள்ள நிலையில் நாயகியாக பிரியா பவானி சங்கரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகும் இப்படம் ஆகஸ்ட்டில் துவங்குகிறது. தமிழில் தற்போது அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக பிரியா பவானி சங்கர் உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.