விக்ரம் போஸ்டர் : பாலிவுட் நடிகர் வியப்பா ? கிண்டலா ?
ADDED : 1552 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படத்திற்கு அவர் ஏற்கனவே 35 வருடங்களுக்கு முன்பு நடித்த விக்ரம் என்கிற டைட்டிலையே மீண்டும் வைத்துள்ளார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பஹத் பாசில் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் பாலிவுட் இளம் நடிகரான அலி பசல் என்பவர், இந்த போஸ்டர் குறித்து தனது கமெண்ட்டை சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார். அதில், “இந்த போஸ்டர் வெளியான பிறகு நாங்கள் வட இந்தியர்கள் எல்லாம் அவ்வளவு தான்.. முடிந்தோம்.. இதோ நான் என்னுடைய மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கிளம்ப ஆரம்பித்து விட்டேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அர்த்தம் தென்னிந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்கள் மூன்று பேர் ஒன்றாக இணைந்து நடிப்பதை பார்த்து அதனால் ஏற்பட்ட ஆச்சர்யமா அல்லது மறைமுகமான கிண்டலா என்பதுதான் தெரியவில்லை.