கோ-2 இயக்குனர் டைரக்சனில் ரவிதேஜா நடிக்கும் ராமாராவ்
ADDED : 1547 days ago
கிராக் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரவிதேஜா நடிக்கும் புதிய படத்திற்கு 'ராமாராவ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரவிதேஜாவின் 68வது படமாக உருவாகும் இந்தப்படத்தை சரத் மாந்தவா இயக்குகிறார். இவர் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் பில்லா படத்தை ரீமேக் செய்தவர்.
அதுமட்டுமல்ல, தமிழில் கோ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய வரும் இவர் தான். இந்தப்படத்தின் கதாநாயகியாக திவ்யன்ஷா கவுசிக் என்பவர் நடிக்கிறார். விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
ராமாராவ் படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிவாஜி பட ரஜினி பாணியில் இரண்டு கைகளிலும் பேனா பிடித்து எழுதுகிறார் ரவிதேஜா. அதற்கேற்ற வகையில் இந்தப்படத்தில் அதிரடி அதிகாரியாகவும் நடிக்கிறாராம் ரவிதேஜா. ஆனால் கிராக் படத்தை போல இதுவும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரமா என்பது தெரியவில்லை.