மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1513 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1513 days ago
2002-ம் ஆண்டு வெளியான 'ஜெமினி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கிரண். வில்லன், அன்பே சிவம், திருமலை என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த கிரண், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். 2017-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் அதிகம் தலைகாட்டாத கிரண், சந்தானத்துடன் 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இன்ஸ்டாகிராமில் தீவிரமாக இருக்கும் கிரண் தினம்தோறும் தனது கவர்ச்சியான புகைப்படங்ள், வீடியோக்களை அள்ளித் தெளித்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பாபா' படத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்டது கூட காரணமாக இருக்கலாம். அப்போது நான் 'ஜெமினி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் என்னால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. நடிப்பிலும், நடனத்திலும் ரஜினியை யாராலும் தொடமுடியாது என்று இப்போதும் நான் சொல்வேன்.
இவ்வாறு கிரண் கூறியுள்ளார்.
1513 days ago
1513 days ago