சசிகுமார் படத்தில் சம்யுக்தா
ADDED : 1562 days ago
2007ல் நடந்த மிஸ்.சென்னை போட்டியில் டைட்டில் வென்றவர் சம்யுக்தா ஷன். சந்திரமுகி தொடரில் ருத்ரா கேரக்டரில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு இன்னும் புகழ்பெற்றார். இதனால் சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. ஓலு என்ற மலையாள படத்திலும் நடித்தார்.
இப்போது சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தை ஹேமந்த குமார் என்ற புதுமுகம் இயக்குகிறார். இந்த படத்திலும் சம்யுக்தா இரண்டாவது நாயகியாக நடிப்பதாக தெரிகிறது. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. என்றாலும் ஹீரோயின் வாய்ப்புக்காக தொடர்ந்து காத்திருக்கிறார் சம்யுக்தா.