உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குறும்படத் தயாரிப்பில் சுசீந்திரன்

குறும்படத் தயாரிப்பில் சுசீந்திரன்

கொரோனா புரட்டிப்போட்ட சினிமாவில் இப்போது பல புதிய பாதைகள் தோன்றி இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் ஓடிடி தளத்திற்கு படம் தயாரிக்கத் தொடங்கி விட்டது. அந்தாலஜி படங்களை தயாரிக்கிறது. சில நிறுவனங்கள் சொந்தமாக ஓடிடி தளங்களையே தொடங்குகிறது.

இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரனின் நல்லுசாமி பிக்சர்ஸ் என்ற பெயரில் குறும்படங்களை தயாரிக்க உள்ளார். இந்த பணிகளை சுசீந்திரனின் சகோதரார் தாய் சரணவன் கவனிக்கிறார்.

முதல் தயாரிப்பாக, நான்கு கதைகள் இணையும் ஹைப்பர் லிங்க் திரில்லராக, உருவாகியிருக்கும் டிரிகுத்ரா (Triquetra ) என்ற படத்தை இயக்குநர் அசோக் இயக்கத்தில் உருவாக்கியுள்ளார். Triquetra என்பது வாழ்வின் மூன்று முனைகளை குறிக்கும் சொல்.

நான்கு கதைகள் ஒன்றாக பயணிக்கும் ஹைப்பர் லிங்க் வகையில், கோயம்புத்தூரை பின்னணி களமாக கொண்டு, சுவாரஸ்ய திரில்லராக, இந்த குறும்படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை இயக்கியுள்ள அசோக், சுசீந்திரனின் உதவியாளர் ஆவார். இதில் பணியாற்றியுள்ள அனைவரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குறும்படங்களை தயாரிக்க நல்லுசாமி பிக்சர்ஸ் முடிவு செய்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !