உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழிலும் வெளியாகிறது லிங்குசாமியின் தெலுங்கு படம்

தமிழிலும் வெளியாகிறது லிங்குசாமியின் தெலுங்கு படம்

தமிழின் முன்னணி இயக்குனர்களான ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி உள்ளிட்ட பலர் தெலுங்கு படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர். இதில் லிங்குசாமி ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் ஜோடியாக உப்பென்னா புகழ் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தெலுங்கில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் தமிழிலும் வெளியாகிறது.

இதன் தமிழக உரிமையை மாஸ்டர் பீஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. படப்பிடிப்பு தொடங்கப்பட்ட முதல் நாளே தமிழக உரிமை விற்பனையாகி இருப்பதால் இயக்குனர் லிங்குசாமி , தயாரிப்பாளர் உள்ளிட்ட படக் குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !