திருமணம் எப்போது? ரசிகரின் கேள்விக்கு சனம் ஷெட்டி பதில்
ADDED : 1590 days ago
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில பங்கேற்று பிரபலமானவர் சனம் ஷெட்டி. அதையடுத்து சில படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சனம் ஷெட்டியிடம் ஒரு ரசிகர் திருமணம் குறித்து ஒரு கேள்வி எழுப்பினார்.
அதற்கு நான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன். அது திருமணம்வரை போய் கடைசி நேரத்தில் நின்று விட்டது என்று பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுடன் தடைபட்ட தனது திரு மணத்தை பற்றி சொன்னவர், நாம் ஒன்று நினைத்தால இறைவன் ஒன்று நினைக்கிறான் என்று கூறியுள்ள சனம் ஷெட்டி,ஒருவேளை எனது திரும ணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.