உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்தார் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது

சர்தார் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது

இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் சர்தார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் கார்த்தி வயதான கெட்டப்பில் தோன்றியதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

மேலும், இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் சர்தார் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. கார்த்தி உள்பட அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !