துப்பறியும் நிபுணராக ராஷி கண்ணா
ADDED : 1590 days ago
துக்ளக் தர்பார், அரண்மனை-3 படங்களைத் தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடிக்கிறார் ராஷி கண்ணா. இந்த நிலையில், தி பேமிலிமேன் வெப் தொடரை இயக்கிய ராஜ்-டிகே இயக்கி வரும் புதிய ஹிந்தி வெப்சீரிஸில் ஷாகித் கபூருடன் இணைந்து நடிக்கிறார் ராசிகண்ணா. கோவாவில் இதன் படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது. அடுத்தபடியாக சோனி லிவ் ஓடிடி தளம் தயாரிக்கும் ஒரு தெலுங்கு திரில்லர் வெப் தொடரிலும் நடிக்கிறார். இதில் அவர் துப்பறியும் நிபுணர் வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.