உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரீதேவி விஜயகுமார்

மகள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரீதேவி விஜயகுமார்

கடந்த 1992ம் ஆண்டு வெளியான ரிக்சா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

படங்களில் பிசியாக நடித்து வந்த இவர், கடந்த 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் குடும்பத்துடன் வசித்து வரும் ஸ்ரீதேவி, தனது மகளின் 5வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !