பொது இடத்தில் காதலருக்கு முத்தம் : ஸ்ருதிஹாசன் மீது ரசிகர்கள் வருத்தம்
ADDED : 1542 days ago
நடிகை ஸ்ருதிஹாசன் இந்த ஊரடங்கு காலத்தை தனது காதலருடன் செலவழித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியைச் சேர்ந்த மைக்கேல் கோர்சலே என்பவரைக் காதலித்து வந்தார். பின்னர் அவரைப் பிரிந்தார். தற்போது கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு என்ற ராப் பாடகரைக் காதலித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் காதலர் சாந்தனுவை பொதுவெளியில் வைத்து முத்தம் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருவரும் மாஸ்க் அணைந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளனர். இதை ஸ்ருதிஹாசனே ப்கிர்ந்துள்ளார். என்னதான் காதலராக இருந்தாலும் பொது இடத்தில் இப்படி செய்யலாமா என்று ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் மீது வருத்தப்பட்டு வருகின்றனர். எனவே அந்தப் புகைப்படம் இணையத்தில் பரபரப்பாகி வருகிறது.