உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நதியாவின் புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நதியாவின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் 80களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் நதியா முக்கியமானவர். ஒரு பேஷன் டிரெண்டையே செட் செய்தவர் அவர். நதியா டிரஸ், நதியா வளையல், நதியா கம்மல் என அன்றைய இளம் பெண்களிடம் 'நதியா' தான் பேஷன் மாடல். அப்போது பார்க்க நதியா எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியேதான் இருக்கிறார் என்பது பலரது கருத்து. இத்தனைக்கும் நதியாவிற்கு 25 வயதிலும், 20 வயதிலும் மகள்கள் இருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு நதியா இன்ஸ்டாகிராமில் இரண்டு புகைப்படங்களுடன் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், 1984ல் அவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்த “நோக்கெதூரத்து கண்ணும் நட்டு” என்ற படத்தில் அவருடன் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த சமீர், ஆசிப் ஆகியோருடன் இருந்த அப்போதைய புகைப்படத்தையும், இப்போது அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

அந்தப் பதிவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பலரும், “அவருடன் அப்போது குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் இப்போது பார்க்க வயதாகிவிட்டவர்களாகத் தெரிகிறார்கள். ஆனால், நதியா அப்படியே உள்ளார்,” என்ற கமெண்ட்டுகள் தான் பரவலாக இருக்கிறது. இன்னும் சிலரோ, அவர்களை விட நீங்கள் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !