உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

விஜய்யின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, விஜய் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா இருவர் அடங்கிய பெஞ்சு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !