பூஜா ஹெக்டே ரொம்ப பிஸி
ADDED : 1541 days ago
ராதே ஷ்யாம், ஆச்சார்யா படங்களைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, இரண்டு ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆரின் புதிய படங்களில் இம்மாதம் இறுதியில் கையெழுத்திடப்போகிறார் பூஜா ஹெக்டே.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் படங்களில் சில மாதங்களுக்கு முன்பே கமிட்டாக இருந்தேன். ஆனால் லாக்டவுடன் காரணமாக நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகள் தாமதமானதால் அது நடக்கவில்லை. தற்போது சகஜநிலை திரும்பி விட்டதால் இம்மாதம் இறுதியில் அந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களையும் சந்தித்து படங்களில் நடிப்பதற்கான அக்ரி மென்டில் சைன் பண்ணப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார் பூஜாஹெக்டே.