சூர்யா பிறந்தநாளில் 40வது பட பர்ட்ஸ்லுக் வெளியாகிறது
ADDED : 1541 days ago
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 40ஆவது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார்.
இந்தபடத்தற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் படத்தின் டைட்டில் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்தநிலையில் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23-ந்தேதி என்பதால் ஜூலை 22-ந்தேதி அன்று மாலை 6 மணிக்கு சூர்யா-40ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.