ரவிதேஜா படத்தில் நடிக்கும் ரஜிஷா விஜயன்
ADDED : 1564 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். அதையடுத்து தற்போது கார்த்தியின் சர்தார் படத்தில் ராஷி கண்ணாவுடன் இணைந்து இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.
அடுத்து ரவி தேஜா நடித்து வரும் ராமராவ் ஆன் டூட்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகியிருக்கிறார் ரஜிஷா விஜயன். தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு வருகிறார். சரத் மண்டவா இப்படத்தை இயக்குகிறார்.