லிங்குசாமி படத்தில் வில்லனாகிறார் ஆதி
ADDED : 1541 days ago
தெலுங்கு நடிகர் ராம்பொத்னேனி, கிருத்தி ஷெட்டி, நதியா ஆகியோர் நடிப்பில் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி பரவியது. அதை படக்குழு உறுதிப்படுத்தாத நிலையில், தற்போது ஈரம், மிருகம் படங்களில் நடித்தவரான ஆதி அப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த தகவலை அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தில் ராம் மற்றும் ஆதிக்கு இடையிலான காட்சிகள் படத்தில் அனல் பறக்கும் பரபரப்போடு மாஸாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.