அடுத்தாண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ்
ADDED : 1541 days ago
கல்கியின் சரித்திர நாவல் பொன்னியின் செல்வன். இதை மணிரத்னம் படமாக இயக்கி வருகிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, மற்றும் பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் இரு பாகமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி உள்ளது.
படம் பற்றிய முதல் அறிவிப்பிற்குப் பிறகு வேறு எந்தவிதமான போஸ்டர்களையோ, புகைப்படங்களையோ படக்குழு வெளியிடாமல் இருந்தனர். இந்நிலையில் திடீரென இன்ப அதிர்ச்சியாக புதிதாக ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். வாளும், கேடயமும் பின்னணியில் இருக்க ‛பிஸ் 1' என குறிப்பிட்டு பொன்னியின் செல்வன் முதல்பாகம் 2022ல் வெளியீடு என அறிவித்துள்ளனர்.