மீண்டும் காதல் கதையை இயக்கும் ரஞ்சித்
ADDED : 1586 days ago
பா.ரஞ்சித் இயக்கிய முதல் படம் அட்டகத்தி. காதல் கதையில் உருவான அப்படத்தின் வெற்றிக்கு பிறகு மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கினார். இதில் ஆர்யா நடிப்பில் உரு வாகியுள்ள சார்பட்டா பரம்பரை வருகிற 22-ந்தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், மீண்டும் அட்டகத்தி போன்ற காதல் கதையில் தனது அடுத்த படத்தை இயக்கப் போவதாகவும், அந்த படத்திற்கு நட்சத்திரம் நகர்கிறது என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பா.ரஞ்சித். இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கப் போவதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.