சந்திரமுகி-2வில் ரஜினி நடிக்கிறாரா?
ADDED : 1536 days ago
2005ல் ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகத்தை லாரன்ஸ் நடிப்பில் தான் இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் பி.வாசு.
இந்நிலையில், சந்திரமுகி-2 படத்தில் ரஜினி ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தொடர்ந்து சோசியல்மீடியாவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அதுகுறித்து டைரக்டர் பி.வாசு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில்,சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த ரஜினி உள்பட யாருமே இரண்டாவது பாகத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதோடு இரண்டாம் பாகத்தின் கதைக் களம் முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட் டது என்றும் தெரிவித்துள்ள பி.வாசு, சந்திரமுகி-2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.