உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிக்கி கல்ராணியிடம் உண்மையை மறைத்த இடியட் பட இயக்குனர்

நிக்கி கல்ராணியிடம் உண்மையை மறைத்த இடியட் பட இயக்குனர்

சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா, தற்போது சிவா நடிக்கும் இடியட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்க, வழக்கம்போல ஹாரர் காமெடி படமாகவே இது உருவாக்கி வருகிறது.

சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படத்தின் டீசரில் நிகி கல்ராணி ஆரம்பிக்கலாமா என கேட்டு இரண்டு கைகளில் இருந்து கத்திகளை வீசுவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அது தற்போது கமல் நடித்து வரும் விக்ரம் படத்திற்காக வெளியிடப்பட்ட டீஸரில் இடம்பெற்றிருந்த காட்சி அது.

அந்த காட்சியை இடியட் படத்திற்காக ஸ்பூப் காட்சியாக படமாக்கியது குறித்து இயக்குனர் ராம்பாலா சமீபத்தில் கூறும்போது, அதில் நடித்தபோது நிக்கி கல்ராணிக்கு அது கமல் படத்தின் காட்சி என்றே தெரியாமல் தான் நடித்தார். பின்னாளில் உண்மை தெரியவந்தபோது, கமல் ரசிகர்கள் தன மீது கோபப்படவோ அல்லது கிண்டலடிக்கவோ செய்வார்களா என்றும் பயந்தார் நிக்கி கல்ராணி.. ஆனால் நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. ரசிகர்கள் அதை ஜாலியாகவே எடுத்துக் கொண்டனர் என கூறியுள்ளார் ராம்பாலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !