உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லூசிபர் ரீமேக் : பூஜையுடன் செட் வேலைகள் தொடங்கின

லூசிபர் ரீமேக் : பூஜையுடன் செட் வேலைகள் தொடங்கின

தற்போது தெலுங்கில் ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அவருடன் ராம்சரண், காஜல்அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோரும் நடிக்கும் இந்த படத்தை கொரட்டல்ல சிவா இயக்குகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது.

அதனால் ஆகஸ்டு மாதத்தில் இருந்து மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப்போகிறார் சிரஞ்சீவி. இந்தநிலையில், நேற்று முதல் ஐதராபாத்தில் அப்படத்திற்கு பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. அதற்கான பூஜை விழா நேற்று நடைபெற்றுள்ளது. பிரபல தெலுங்கு ஆர்ட் டைரக்டர் சுரேஷ்செல்வராஜன் இப்படத்திற்காக பிரமாண்டமான கோயில் நகரத்தை உருவாக்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !